மன்னாரில் உள்ள ஆதரவாளர்களை சந்தித்த மாவை சேனாதிராஜா(video)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு நேற்று(12.01.2023) விஜயம் செய்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடு

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறுகையில்,“இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு,மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.இத்தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும்.
இந்த தேர்தல் ஏறகனவே உள்ள நடைமுறையோடு,மக்கள் மத்தியில் பல குறைபாடுகள்,ஆட்சி நடத்த முடியாத நிலை,வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆளும் தரப்பு,எதிர் தரப்பு என்ற வகையில்,ஆளும் தரப்பில் வெற்றி பெற்றிருந்தது பதவியை பெற்றிருந்தாலும் எதிர் தரப்பில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.
இதில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் கூறிய போதும் அதற்கான திருத்தங்கள் இன்னும் கொண்டு வரவில்லை.
பல வகையான கேள்விகள்

தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில், அவர்களுடைய செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால் அந்த செயற் குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்து இருக்கின்றோம்.
ஏற்கனவே பெற்ற பெறுமானங்களின் அடிப்படையில் அதை வைத்து ஆட்சியை நடத்த முடியாத அடிப்படையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும் அந்த அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் இப்பொழுது தமிழரசுக்கட்சியின் சிபாரிசு ஒரு புதிய நடைமுறை வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான, கூடிய ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறை பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட்,ரெலோ கட்சிகளுடன் தமிழரசுக்கட்சியின் சிபாரிசுக்கு பின்னர் நாங்கள் விவாதித்து இருக்கின்றோம்.”என தெரிவித்துள்ளார்.



இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri