யாழில் டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு கிடைக்கப்பெற்றது.
அனுமதிப்பத்திரம் இன்மை
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்று (02-01-2025) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் எற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |