கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த கோரி போராட்டம்
கிளிநொச்சியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(03.01.2025) 155ஆம் கட்டை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போதை வெறியில் வாகனம் செலுத்தி இளம் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை ஆகியோரின் உயிர்களை பலியெடுத்தவர்களுக்கு சட்டம் உடனடியாக தண்டனை வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதாதை
இன்னுமொரு உயிர் பலி வேண்டாம், போதை வெறி சாரதிகளை கட்டுப்படுத்து, நீதிமன்றமே உன்னையே நம்புகின்றோம் மற்றும் வீதியில் எம்மை பலி கொடுக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.
அத்துடன், போக்குவரத்து பொலிசாரை வீதிக்கடமைகளில் அமர்த்துமாறும், தண்டனைக்குரிய குற்றங்களுக்கு அதி உயரிய தண்டனைகளை வழங்குமாறும் மக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri