முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Shan Jan 03, 2025 09:57 AM GMT
Report

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம், இன்றையதினம்(03.01.2024) காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர், கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அநுர அரசின் மீதான மக்களின் நம்பிக்கையீனம்! மொட்டுக் கட்சி விசனம்

அநுர அரசின் மீதான மக்களின் நம்பிக்கையீனம்! மொட்டுக் கட்சி விசனம்

அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்

மேலும், குறித்த பாடசாலை அதிபரின் மீது, 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை மற்றும் அவரது பொறுப்பற்ற வார்தை பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாடசாலையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 83இலிருந்து 63ஆக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மனு

குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை.

இவ்வாறான காரணங்களாளேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார்.

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Protest Demanding Transfer Of Vidyananda Principal

அதன்பின்னர், போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மனு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மனுவை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.

ரணில் - சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! இரு தரப்பு பேச்சு ஆரம்பம்

ரணில் - சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! இரு தரப்பு பேச்சு ஆரம்பம்

மகிந்த தரப்பின் உறுப்பினர் ஒருவர் சிஐடியால் அதிரடி கைது

மகிந்த தரப்பின் உறுப்பினர் ஒருவர் சிஐடியால் அதிரடி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US