மகிந்தவின் பாதுகாப்புக்கு ஆறு பொலிசார் போதும்! விக்னேஸ்வரன் அதிரடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஆறு பொலிசாரே போதும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்(C.V.Vigneswaran) கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் அதிரடி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளினால் அவருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் மகிந்தவுக்கு அவரது மெதமுலனை நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றதா என்பது குறித்து தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட ஆறு பொலிசாரே போதுமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 11 மணி நேரம் முன்
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri