நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள்

Sri Lanka Police Galle Jaffna Kilinochchi Mannar
By Aanadhi Jan 05, 2025 07:52 AM GMT
Report

காலி, பூசா சிறைச்சாலையின் கைதிகளுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க, நேற்று (04) சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

மன்னாரில் இளைஞன் கைது

அத்துடன், இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் இருந்து 200 போதை வில்லைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரும், போதை மாத்திரைகளும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி - ஆசிக்

யாழில் இளைஞர்கள் கைது

மேலும், யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 34 மற்றும் 23 வயதுடையவர்கள். அவர்களில் ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் அதே பொலிஸாரால் அதே பகுதியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி - தீபன்

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் கைது 

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் உமையாள்புரம் பகுதியில் 500 கிராம் எடை கொண்ட கஞ்சாவுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

குறித்த இராணுவ சிப்பாய் நேற்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி - தேவந்தன்

வவுனியாவில் இருவர் கைது 

அத்துடன், ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப்படையினர் இன்று(05.01.2024) கைது செய்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் | Police Operations Carried Out In Sri Lanka

வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வழிமறித்த பொலிஸார், அதில் சோதனையை முன்னெடுத்தனர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில், பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது. அதனை உடமையில் வைத்திருந்த தென் பகுதிகளை சேர்ந்த இரண்டு நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையின் சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள இடநெருக்கடி

இலங்கையின் சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள இடநெருக்கடி

பின்லாந்தில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் திடீர் மரணம்

பின்லாந்தில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் திடீர் மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US