தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரே இவ்வாறு தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தலைமைப்பீடத்தின் தீர்மானம்
சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின்போது தழிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்தமைக்காக இவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் இவரை இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைமைப் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த உறுப்பினரின் செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது.





நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
