டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்
ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல இலக்குகள்
கடந்த 13ஆம் திகதி ஈரானை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரமடையவே தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
இதன்படி, அமெரிக்கா ஈரானின் முக்கிய 3 அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மேலும் பல இலக்குகளை தாம் குறிவைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான்தான். அந்நாட்டில் மேலும் சில இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம்.
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முன்வரவேண்டும். அமெரிக்க இராணுவத்தினர் ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம்.
ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த இராணுவத்தாலும் செய்ய முடியாது.
ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும். இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவிற்கு மரணம் என்று கடந்த 40 ஆண்டுகளாக ஈரான் கூறி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலை தடுக்க நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.





வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
