அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் உலக சமாதானத்திற்கு நேரடியான அபாயம் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஈரானை தாக்கியதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அபாயகரமான முன்னேற்றம் என்றும், உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளமான X மூலம் வெளியிட்ட செய்தியில், குட்டெரஸ் கூறியதாவது: “ஏற்கனவே பதற்றம் நிறைந்த மத்திய கிழக்கு பகுதியில் இது மிக ஆபத்தான நிலை எனவும் இந்த மோதல் வேகமாக கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான ஒழுங்கின்மை
இதனால் பொதுமக்கள், அந்தப் பிராந்தியம் மற்றும் உலகமே பேரழிவை சந்திக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. உறுப்புநாடுகள் தங்கள் கடமைகளை ஐக்கிய நாடுகள் பிரகடனங்களுகக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் ஏற்ப பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அபாயகரமான நேரத்தில் அமைதிக்கான ஒழுங்கின்மையைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் குட்டாரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் மோதல்களை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
