அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி தளம்! தயார் நிலையில் B-2 - USS

Donald Trump Middle East Iran-Israel War
By Dharu Jun 18, 2025 12:00 AM GMT
Report

அமெரிக்க இராணுவ உத்திகள் பல்வேறு மட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன, இவை தேசிய பாதுகாப்பு, உலகளாவிய செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு உத்திகளை அடிப்படையாகக் கொண்டவை.   

இதன்படி அமெரிக்கா, மத்திய கிழக்கில் தனது இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா தலையிடுமா என்பதை டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதால், அடுத்த நிலைப்பாடுகள் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளன.

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை அமெரிக்கா தாக்க முடியுமா? என்பது தற்போதுள்ள மிக முக்கிய கேள்விகளில் ஒன்று.

விமர்சன ரீதியாக, ஈரானின் ஃபோர்டோவில் உள்ள ஆழமான அணு செறிவூட்டல் தளத்தைத் தாக்கப் பயன்படுத்தப்படும்  குண்டுவீச்சு விமானங்கள் குறித்து எந்த புதிய தகவலும் இதுவரையில் அமெரிக்காவால் வெளிப்படுத்தப்படவில்லை.

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

அமெரிக்காவின் தற்காப்பு நிலை

இந்த விமானங்கள் 13.6 தொன் (30,000 pound) எடையுள்ள பதுங்கு குழி குண்டுகளை கொண்டுள்ளதாகவும், 60 மீட்டர் பாறையை ஊடுருவிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தரப்புகளுக்கு கூடுதல் திறன்களைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது பிராந்தியத்தில் அமெரிக்காவின் தற்காப்பு நிலையை மேம்படுத்துவதற்கான ஒன்று என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி தளம்! தயார் நிலையில் B-2 - USS | Us Increased Military Presence Middle East

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிற்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டனுக்குத் திரும்பியபோது, ​​மோதலுக்கான உண்மையான முடிவை தாம் தேடுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், தான் ஒரு போர்நிறுத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், நாங்கள் ஒரு போர்நிறுத்தத்தை விட சிறந்ததைப் எதிர்பார்க்கின்றோம் என்றும் எச்சரிக்கை கருத்தொன்றை பதிவுசெய்துள்ளார்.

இருப்பினும், பென்டகனின் நீண்ட தூர வான்வழித் தாக்குதலைப் பரிசீலித்து வருவதற்கான தடயங்கள் மற்றும், அமெரிக்க விமானப்படையின் 31க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பும் விமானங்களின் இயக்கத்திலிருப்பதாகவும் ஒரு செய்தியை அவர் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பெரும்பாலான KC-135 ஸ்ட்ராடோடேங்கர்கள் மற்றும் KC-46 பெகாசஸ் விமானங்கள், ஐரோப்பாவின் கிழக்கு நோக்கிச் சென்றதாக, விமானக் கண்காணிப்பு வலைத்தளமான AirNav Systems கண்காணித்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்க விமானப்படை B-2 குண்டுவீச்சு விமானங்கள் எரிபொருள் நிரப்பாமல் சுமார் 6,000 மைல்கள் வரை நீண்ட தூரத்தை எட்டும் திறன் கொண்டவை.

ஆனால் அவை சர்வதேசத்தின் சில தளங்களிலிருந்தே இயங்குகின்றன.

ஈரானை நோக்கி அதிரடியாக விரைந்த 60 யுத்த விமானங்கள்!

ஈரானை நோக்கி அதிரடியாக விரைந்த 60 யுத்த விமானங்கள்!

டியாகோ கார்சியா தளம் 

மிசோரியில் உள்ள வைட்மேன், ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ஃபேர்ஃபோர்ட் மற்றும் குறிப்பாக தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட டியாகோ கார்சியா தளம் ஆகியவற்றில் இந்த விமானங்கள் இயங்குtதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஒக்டோபரில், 8,000 மைல்கள்(12874km) தொலைவில் உள்ள வைட்மேனில் இருந்து ஐந்து நிலத்தடி ஹவுத்தி ஆயுத வசதிகளை B-2 குண்டுவீச்சு விமானங்கள் தாக்கியிருந்தன.

அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி தளம்! தயார் நிலையில் B-2 - USS | Us Increased Military Presence Middle East

இந்நிலையில் ஈரானின் இரண்டு முக்கிய யுரேனியம் செறிவூட்டல் தளங்களில் ஒன்றான ஃபோர்டோவை அழிக்கக்கூடிய அளவுக்கு பெரிய வெடிகுண்டு - GBU 57/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் - அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த தளம் ஒரு மலைக்கு கீழே 80 - 90 மீட்டர் தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் ஒரு கட்டத்தில், அமெரிக்காவிடம் அதன் மிகப்பெரிய அணு அல்லாத ஆயுதமான B-2 விமானத்தின் 20 குண்டுகள் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் அதைவிட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அந்நாட்டின் வான்வெளியில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தியதாகத் தோன்றினாலும், அது நடவடிக்கையின் முதல் நாளில் மட்டுமே ஃபோர்டோவை(ஈரானில் அணு சக்தி மையம்)  தாக்கியது.

எனினும் இந்த தாக்குதல் அங்குள்ள அணு செறிவூட்டல் ஆலைக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்று IAEA அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை!

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை!

இரகசியமான காணொளி

மே மாதத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் , டியாகோ கார்சியாவில் ஆறு B-2 குண்டுவீச்சு விமானங்கள் இருப்பதைக் காட்டியதாக IAEA தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரையின்படி, ஒரு தசாப்தத்திற்கு முன்னர், அமெரிக்க பென்டகன் ஃபோர்டோவின் பிரதியை உருவாக்கி, 30,000 pound எடையுள்ள ஒரு சாதனத்தைக் கொண்டு சோதனை குண்டுவீச்சு நடத்தியதாக கூறியள்ளது.

இந்தத் தாக்குதலின் மிகவும் இரகசியமான காணொளியை பின்னர் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த லியோன் பனெட்டா, இஸ்ரேலிய அரசியல்வாதி எஹுட் பராக்கிடம் காட்டியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட ஈரானின் அணுசக்தி தளம்! தயார் நிலையில் B-2 - USS | Us Increased Military Presence Middle East

ஈரானின் மற்றொரு அணுசக்தி செறிவூட்டல் தளமான நடான்ஸையும் அமெரிக்கா தாக்க பரிசீலிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவீச்சினால் ஒரு சிறிய நிலத்தடி தளம் அழிக்கப்பட்டாலும், 8 முதல் 12 மீட்டர் வரை நிலத்தடியில் உள்ள தளம் ஒப்பீட்டளவில் சேதமடையவில்லை என்று IAEA கூறுகிறது. இருப்பினும் இஸ்ரேலிய இராணுவம் இதை மறுத்துள்ளது.

இஸ்ரேலின் ஐந்து நாட்கள் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீது செயல்படும் அமெரிக்க ஜெட் விமானங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் நம்புகிறார்களா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

ஆனால் மீதமுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து அமெரிக்கா விரிவாக்கப்பட்ட தாக்குதலை நடத்த விரும்பினால், அதன்கான முழு ஆயுத வசதிகளை அமெரிக்கா கொண்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், USS நிமிட்ஸ் தலைமையிலான இரண்டாவது விமானம் தாங்கி தாக்குதல்(போர் கப்பல்) குழு கிழக்கு ஆசியாவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டது.

அங்கு அது ஏற்கனவே ஈரானுக்கு அருகில், அரேபிய கடலைச் சுற்றி செயல்பட்டு வரும் USS கார்ல் வின்சன் யுத்த தாங்கி கப்பலுடன் இணையும் என கூறப்படுகிறது.

இதன்படி தற்போது மூன்று அமெரிக்க யுத்த தாங்கி கப்பல்கள் கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானை இலக்கு வைத்த இஸ்ரேலின் தாக்குதல்! 20க்கும் மேற்பட்ட மூத்த தளபதிகள் பலி

ஈரானை இலக்கு வைத்த இஸ்ரேலின் தாக்குதல்! 20க்கும் மேற்பட்ட மூத்த தளபதிகள் பலி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US