சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.
சந்தித்து கலந்துரையாடிய விடயஙகள்
அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு பல்வேறு விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கொண்டு செல்வார்கள்.
ஆனால், அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதோடு யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் எனது மற்றொரு நண்பரான ரங்க கலன்சூரிய மற்றும் சில நண்பர்களுடன் சந்தித்து இரண்டு, மூன்று மணிநேரம் பல விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தோம்.
பேச்சுவார்த்தை முடிந்து நான் போகும் போது, "சேர், நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார். எனவே, அவருடைய இந்த மறைவு, இவ்வாறு நடக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
காரணம் என்ன
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்து பல மணிநேரம் ஒன்றாக இருந்ததால், இந்தச் செய்தியைக் கேட்டதும் எனது மனதை மிக ஆழமாகப் பாதித்ததோடு பெரும் மன வேதனையைத் தந்தது.

எனவே, இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது, என்ன காரணம் என்று இன்னும் சொல்ல முடியாது. விசாரணைகளின் மூலமே அது தெரியவரும்.
இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார்.
அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம்.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..
you may like this video