அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டனில் இப்தார் நிகழ்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (03.04.2024) நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
இந்த நிகழ்வானது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பள்ளிகளுக்கு அபிவிருத்தி பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இ.தொ.காவின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |