யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த வேளை நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு தப்பி ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
