பிரித்தானியாவில் ஆங்கிலம் தெரியாத தமிழரை விளாசித்தள்ளிய ரணில் (Video)
பிரித்தானியாவில் தமிழ் செயற்பாட்டாளரொருவரை தமிழில் பேசுமாறு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்திய காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணிலின் பிரித்தானிய விஜயத்தின் போது, பிரித்தானியத் தலைநகர் லண்டனில் ரணிலுக்கு எதிராக கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
எதிர்ப்பு போராட்டம் ரணில் விக்ரமசிங்க தங்கியிருந்த பார்க்லேன் இன்ரர் கொண்டினன்ரல் ஆடம்பர விடுதிக்கு அருகிலும், அவர் பங்கெடுத்த சர்வதேச ஜனநாயக ஒன்றிய மாநாடு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் எதிர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத்தமிழர் பிரதிநிதிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி ரணில் சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பின் போது ஐவரில் ஒருவர், ரணில் விக்ரமசிங்கவை நோக்கி கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
அதன்படி ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன் இலங்கையின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதற்கு ரணில் பதிலளிக்கையில், “அந்த செயற்பாட்டாளர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும், தனக்கு தமிழ் மொழி புரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |