வேலை செய்ய முடியாவிட்டால் வீட்டுக்குச் செல்லுங்கள்! அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் கடுமையான செய்தி
அரச அதிகாரிகள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாருக்கும் இலவசமாக உணவளிக்க அரசு தயாராக இல்லை என்றும், வேலை செய்ய முடிந்தால் வேலை செய்யுங்கள், இல்லையென்றால் வீட்டிற்குச் செல்லுங்கள் என்றும் அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கூறினார்.
அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகுகிறார் ரணில்! யாரும் எதிர்பாராதவர் அடுத்த ஜனாதிபதி: பிரபல ஜோதிடரின் பரபரப்பு தகவல்(Video) |
மிகுந்த மன அழுத்தத்தில் பொது மக்கள்
கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம்.
இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகையதொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை. அந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். கடந்த வருடத்தை விட நமது பொருளாதாரம் 8% சதவீதத்தால் குறையும். இது வேகமாக இடம்பெறுகிறது. அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டிவரும்.
இவ்வாறு நிகழும்போது, நாம் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்று பார்க்க வேண்டும்.
நாம் இந்தப் பெரும்போகத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அதற்கான உதவிகள் தற்போது கிடைத்துள்ளன. அதேபோன்று உர மானியமும் வழங்கப்படுகிறது. தேவையான விதைகள் வழங்கப்படும். விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான அளவு எரிபொருள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
ரணிலுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள அழுத்தம் |
மீண்டும் இலங்கைக்கு பணம்..
ஏற்றுமதித் துறையில் இருந்து இப்போது எமக்கு பணம் கிடைக்கிறது. ரூபாவின் பெறுமதி நிலையாகும்போது மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் பணம் நேரடியாக இலங்கைக்கு வந்து சேரும்.
இப்போது நமக்கு இருக்கும் ஒரே உதவி நாம்தான். வெளியாட்களின் உதவி இப்போது முடிந்துவிட்டது. இந்தியா எங்களுக்கு உதவி செய்துள்ளது, உலக வங்கி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு உதவி செய்துள்ளன.
இந்த சலுகைகளுடன், விவசாயத்துடன் நமது விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம். இப்பணியில் குறிப்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்ன குறை இருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பதை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவார்கள்.
வங்கி நாணய கடித வழங்கலில் முன்னேற்றம்! |
இலவசமாக உணவளிக்க முடியாது
இவை அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். மேலும், கீழ்மட்டத்தில் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சுமார் 09 அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அவர்களது கிராம உத்தியோகத்தர் பிரிவைப் பிரித்து ஒவ்வொருவரும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் வேலை செய்யாமல் பணம் வழங்கத் தயாராக இல்லை. அந்த பொறுப்பை மாவட்ட செயலாளர் ஏற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது.
ஏதாவது செய்ய வேண்டும். என்னாலும் இலவசமாக சாப்பிட முடியாது, இந்த நாட்டை முன்னேற்றா விட்டால் நானும் வெளியேற வேண்டும்.
எனவே முதலில் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இப்பணியைத் தொடருங்கள். இது தொடர்பில் முன்னாள் உறுப்பினர்களும் சிறப்பாக செயற்பட வாய்ப்பு உள்ளது. அனைவரும் இணைந்து இந்தப் பணியை செய்வோம்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை உறுதி: நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் |
அரசாங்கத்திடம் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது அரசாங்கத்தின் மூலம் வாழும் காலம் முடிந்துவிட்டது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் அதை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
