தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை உறுதி: நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாஸ தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை
அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். அதற்கமைய முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும்.
அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள்
விவகாரமும் ஒன்று இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும்” என தெரிவித்துள்ளார்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
