ரணிலின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 270 நாட்களில் இருந்து ஓராண்டாக நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் கட்டண அறவிடும் முறையை எளிமையாக்கவும் அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசா கட்டணத்தில் மாற்றம்
புதிய முடிவால் சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் விசா கட்டணம் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, 180 நாட்களுக்கு அறவிடப்படும் 245 அமெரிக்க டொலர் கட்டணம் 35 டொலர்களால் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், ஓராண்டு நுழைவு சுற்றுலா விசாவிற்கான கட்டணம் 685 டொரில் இருந்து 200 டொலராக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் திட்டம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த விசேட யோசனைக்கமைய, வீசா கட்டணத்தை குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
