வங்கி நாணய கடித வழங்கலில் முன்னேற்றம்!
ஏற்றுமதிகளுக்கான வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவையில் உள்ள நாணய கடிதங்களை தற்போது கிரமமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தனியார் வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பை குறைக்காமல் நிர்வகிக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாணயக்கடிதங்கள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை இப்போது ஓரளவு மேம்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கியின் வெளிநாட்டு கல்விக்கொடுப்பனவு
ஒரு பெரிய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, இப்போது தனது வங்கி வெளிநாட்டுக் கல்விக் கொடுப்பனவுகளுக்கு உதவியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. ஏற்றுமதியாளர்கள் முன்பை விட இப்போது அதிக டொலர்களை அனுப்புவதாகவும், எனவே இந்த ஏற்றுமதி வருவாயைக் கொண்டு தாம் நிர்வகிப்புக்களை மேற்கொள்வதாகவும் மற்றும் ஒரு வங்கியின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சில வர்த்தக நிறுவனங்கள் திருப்தி அடையவில்லை. தமது
நிறுவனத்துக்கு 5000 க்கும் குறைவான நாணயக்கடிதங்களையே திறக்க முடிவதாக
ஏற்றுமதியாளர் ஒரு குறைப்பட்டுக்கொண்டார்.

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
