இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 41 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 72 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 373.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 358.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 441.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 423.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது 1176.08 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.23 ரூபாவாக காணப்படுகிறது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam