ஒரு மில்லியனை தாண்டியது இலங்கையின் தனி நபர் கடன்:நாளை பிறக்கும் குழந்தையும் கடனாளி
இலங்கை மத்திய வங்கியின் புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய 2022 ஏப்ரல் மாதம் அளவில் இலங்கை அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் 23 ஆயிரத்து 310.1 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
தேசிய கடன் 12 ஆயிரத்து 442.3 பில்லியன் ரூபா
மொத்த தேசிய கடன் 12 ஆயிரத்து 442.3 பில்லியன் ரூபா எனவும் வெளிநாட்டு கடன் 10 ஆயிரத்து 867.8 பில்லியன் ரூபா எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை அரசின் மொத்த கடன் 17 ஆயிரத்து 589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகி இருந்தது. அந்த கடன் தொகையானது நான்கு மாதங்களில் மேலும் 5 ஆயிரத்து 720.7 பில்லியன் ரூபா என 32.52 சத வீதம் அதிகரித்தது.
இதனிடையே தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த சனத்தொகை 22.156 மில்லியனாகும்.
மொத்த தனிநபர் கடன்
இதனடிப்படையில் கணக்கிடும் போது இலங்கையின் தனிநபர் கடன் 10 லட்சத்து 52 ஆயிரத்து 89 ரூபா. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அது 7 லட்சத்து 93 ஆயிரத்து 888 ரூபாவாக இருந்தது.
இவற்றின் அடிப்படையில், இலங்கை குடிமக்கள் அனைவரும் 10 லட்சம் ருபா கடனாளிகள் என்பதுடன் நாளை பிறக்க போகும் குழந்தையும் நாட்டின் கடனாளிகள் பட்டியலில் அடங்கும்.