ரணிலுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள அழுத்தம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத சட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியாக கடும் அழுத்தம் எழுந்துள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு அழுத்தம்
அவ்வாறான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டால் அது இலங்கையின் கறுப்பு நாளாக அமைந்துவிடும் என மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த மூவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. கவலை
I'm deeply concerned that Human Rights Defenders Wasantha Mudalige, Hashan Jeevantha & Galwewa Siridamma Himi have been arrested under the #SriLanka's Prevention of Terrorism Act. I call on President Ranil not to sign their detention order, doing so would be a dark day for ??.
— Mary Lawlor UN Special Rapporteur HRDs (@MaryLawlorhrds) August 21, 2022
இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.