நான் மீண்டும் பிரதமரானால்......! அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் அதிரடி அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வீர்களா என நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கூட்டவுள்ள சர்வக் கட்சி மாநாட்டில் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை ஒன்றை நிறைவேற்றி, அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
