ஏராளமான கியூப மற்றும் வெனிசுவேலா வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடிப்பதற்காக அமெரிக்காவின் எலைட் (Elite) படையினர் நடத்திய ராணுவ நடவடிக்கையில் ஏராளமான கியூப மற்றும் வெனிசுவேலா வீரர்கள் கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மதுரோவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில், கியூபாவைச் சேர்ந்த 32 பாதுகாப்புப் படையினரும், வெனிசுவேலாவைச் சேர்ந்த 23 வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மசகு எண்ணெய் கப்பல்
இந்தத் தாக்குதலை "மிகச்சிறப்பானது" என்று வர்ணித்துள்ள ட்ரம்ப், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதியை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கியூப அரசு தனது நாட்டு வீரர்கள் 32 பேர் கொல்லப்பட்டதை அதிகார பூர்வமாக அறிவித்து, இரண்டு நாட்கள் தேசியத் துக்கம் அனுஷ்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் தலைநகர் காரகாஸின் வீதிகளில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் பாதுகாப்புப் படையினர் "எப்போதும் விசுவாசமாக இருப்போம், துரோகம் செய்ய மாட்டோம்" என்று முழக்கமிடும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், மதுரோவின் ஆதரவாளர்கள் இன்னும் அதிகாரப் பதவிகளில் நீடிப்பதால், மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமும் மிரட்டலும் நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், கரீபியன் கடல் பகுதியில் கடந்த மாதம் அமெரிக்காவால் சோதனையிட முயற்சிக்கப்பட்ட ஒரு மசகு எண்ணெய் கப்பல் தற்போது ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam