மாகாண சபைத் தேர்தல் முறைமை : தெரிவுக்குழுவை நியமிக்க பிரேரணை சமர்ப்பிப்பு
மாகாண சபைகள் தேர்தல் முறைமையைத் தெரிவு செய்வது குறித்து ஆராய்வது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நேற்று(06.01.2026)நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்
இதற்கமைய, மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து இந்தத் தெரிவுக்குழு ஆராயவுள்ளது.

அதன்பின்னர், இது தொடர்பான தனது முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தக் குழுவுக்குப் பணிக்கப்படும்.
இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam