வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி! அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

Government Economic Dollers Parliamentmembers
By Kanamirtha Feb 12, 2022 03:15 PM GMT
Report

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்துக்கு ஆளும், எதிரணி கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர். 

நடைமுறையில் எதிர்கொண்டிருக்கும் முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார சவால்களின் தன்மையை உணர்ந்து, எம்மை அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு அவசரமான ஆக்கப்பூர்வமான மாற்றும் நிலையான தீர்வுகளை வேண்டிநிற்கிறோம் என அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவற்றுள்,

1. சர்வதேச கடன் சந்தைகளின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு நாட்டின் மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஏப்ரல் 2020முதல் சர்வதேசச் சந்தையில் சர்வதேச பினைமுறி பாத்திரங்களைப் பயன்படுத்தி கடன் வாங்குவதிலிருந்து இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

2. அரசின் கடனுக்கான வட்டி விகிதம் 2020இல் 70%க்கும் அதிகமாக இருந்தது. இது இலங்கையின் வரலாற்றில் மிக உயர்வானது என்பதோடு உலகின் மிக உயர்வான விகிதங்களில் இது அடங்கும்.

3. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புடன் ஒப்பிடும் போது பொதுக்கடனின் விகிதமும் 120%ஆக மிக உயர்ந்த விகிதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்ணளவாக 25சதவீத புள்ளிகளால் உயர்ந்துள்ளது. இவ்விரண்டு சூழ்நிலைகளும் ஒரு பாரதூரமான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும். 

ஒரே நேரத்தில் நிகழும் இந்த அழுத்தமானதும் வரலாறு காணாததுமான பொருளாதார நெருக்கடி குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இரண்டிலும் நமது எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்திற்கு ஒரு கடினமான பணி உள்ளது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மேலும் ஒரு நாடக இந்த சவாலைக் கடந்து வர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியின் பாதகமான தாக்கத்திலிருந்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை தனது மக்களுக்கு வலுவான சமூக நலனை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.  

 மேலும் நாம், தேசிய பொருளாதார கொள்கையில் திறமான சீர்திருத்தத்தின் அவசியத்தை ஒப்புக்கொள்வதோடு, அச்சீர்திருத்தம் இந்த நிலைமைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் நிலையான தீர்வுகளை உறுதி செய்து, நமது எதிர்கால சந்ததியினருக்குச் சமமான மற்றும் நியாயமான தீர்வை உருவாக்கும் எனவும் அங்கீகரிக்கிறோம்.

பொது நிதியின் முழு கட்டுப்பட்டையும் நாடாளுமன்றம் கொண்டுள்ளது என்பதையும் இலங்கையில் பொது நிதிகளை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நம்பிக்கையான பொறுப்பு உள்ளது என்பதையும் நாங்கள் முழுமையாக அறிவோம்.

  இவ்வாறான சூழலில் இலங்கையின் பினைமுறி கடனை மீள் செலுத்தும் பொருட்டு ஒழுங்கமைவான பேச்சுவார்த்தை மூலமான ஒத்திவைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பல படிமுறைகளடங்கிய செயல்முறையை உடனடியாக தொடங்குவதே சிறந்த முன்னோக்கிய வழி என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.  

அதன் பின்னதாக இலங்கை நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் முகாமைத்துவ பாதையை நோக்கி தமது கொள்கையைச் சரிசெய்து கொள்ளவும், அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அதன் மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்களை அணுகக்கூடியதை உறுதிப்படுத்தவும் முடியும். இதன்மூலம் நடைமுறையின் அந்நிய செலாவணி தட்டுபாட்டால் முகங்கொடுக்கும் இன்னல்களும் கஷ்டங்களும் குறைவடையும். எந்தவொரு முன்னோக்கிய பாதையிலும் நாட்டில் உள்ள வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சிரமங்களைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு போதுமான சமூக மற்றும் ஏனைய பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

குறித்த யோசனையில் எதிர்க்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கிம், திஸ்ஸ விதாரண, ம.ஆ.சுமந்திரன், கபீர் ஹக்கீம், ஹர்ஸ டி சில்வா, எரான் விக்கரமரத்ன, சாணக்கியன் ராஜமாணிக்கம், மனோ கணேசன், ரிஷர்ட் பதியுதீன்,  இரா.சம்பந்தன்     மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US