உலகக்கோப்பை போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
புதிய இணைப்பு
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 49.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 109 ஓட்டங்களையும் டேவிட் விர்னர் 81 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் கிளைன் பிலிப்ஸ் மற்றும் டிரன்ட் போல்ட் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அந்த வகையில் 389 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்று தோழ்வியடைந்தது.
முதலாம் இணைப்பு
உலகக்கிண்ண தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இன்றைய போட்டில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி மோதிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அவுஸ்திரேலிய அணி
இதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை டிராவிஸ் ஹெட் பெற்றதுடன் டேவிட் வார்னர் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அந்தவகையில் நியூசிலாந்து அணிக்கு 389 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.