முக்கிய ICC ஆண்கள் கிரிக்கெட் தொடர்கள் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள தகவல்
2032 முதல் 2035 வரை நடைபெறவுள்ள முக்கிய ICC ஆண்கள் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் உரிமைகள் இன்னும் எந்த நாட்டிற்கும் ஒதுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெளிவுபடுத்தியுள்ளது.
நவம்பர் 15ஆம் திகதி ICC வெளியிட்ட அறிவிப்பில், 2035ஆம் ஆண்டு வரையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டதாகவும், போட்டிகளை நடத்தும் நாடுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.
தவறான செய்திகள்
2026 T20 உலகக்கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தியது 2029 செம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா நடத்துகிறது.

2031 உலகக்கிண்ணத்தை இந்தியா மற்றும் பங்களாதேஷ் இணைந்து நடத்துகின்றன.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டிலேயே தீர்மானிக்கப்பட்டவை என ஸ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, 2035 வரை இலங்கைக்கு ICC போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இல்லை என்ற செய்திகள் தவறானவை என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம் அளித்துள்ளது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri