யாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அறிமுக விழா (Video)
பிறைடஸ் பிரீமியர் லீக்-2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இன்று யாழ். மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் இந்துகல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக IBC தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவர் கந்தையா பாஸ்கரண் மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ். இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதான அணுசரணையை IBC தமிழ்
இந்த சுற்றுப்போட்டிக்கான பிரதான அணுசரணையை IBC தமிழ் ஊடக வலையமைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மாநகர சபை இனை அனுசரனையுடனும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் இந்த சுற்றுப்போட்டியானது நடத்தப்படுகின்றது.
இந்த சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றவுள்ளன.
இந்த சுற்றுப் போட்டியானது தொழில்முறையானதாக அமைவதுடன் யாழ். மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்கும் முயற்சிக்கின்றது.
பிறைடஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்
வெற்றியாளர் 1000000.00/=
இரண்டாம் இடம் : 500000.00/=
மூன்றாம் இடம்: 200000.00/=
நான்காவது இடம்: 100000.00/=

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
