ரணிலுடன் இணைகின்றாரா ஹிருணிகா!
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொலைபேசி மூலம் ஹிருணிகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரணிலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் விரைவில் அவர் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
வேறு ஒருவருக்கு ஆதரவு
எனினும் தாம் ஒருபோதும் ரணிலுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான அரசியலில் ஈடுபடும் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் சஜித் பிரேமதாசவை விட்டு வேறு ஒருவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் முகத்தைக்கூட தாம் பார்க்க விரும்புவதில்லை எனவும் அதனால் அவர் செல்லும் நிகழ்வுகளைக் கூட தாம் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சஜித்தின் மனைவி ஜலனி பிரேமதாச ரணிலுக்கு ஆதரவளித்தாலும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஹிருணிகா கூறியதாக பிரபல ஊடகவியலாளரொருவர் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
