நடைமுறை போர்களுக்கு மிக மோசமான உதாரணமாகியுள்ள இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
போருக்குப் பின்னர் இலங்கையில் நிலவிய தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் நிலையானது, உலகின் ஏனைய பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களைப் புரிபவர்களுக்குத் துணிச்சல் அளிக்கும் ஒரு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது மனிதாபிமான பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், "நான் பலமுறை இறந்தேன்" (I died many times) எனும் தலைப்பில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காகக் கலந்தாலோசிக்கப்பட்ட பலரும், எவ்விதத் தூண்டுதலுமின்றித் தாமாகவே இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலுக்கும் சமகாலத்தில் உலகில் இடம்பெறும் ஏனைய மோதல்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தவறான உதாரணம்
குறிப்பாக, மனிதாபிமான நடவடிக்கைகள் மீதான தாக்குதல்களும், உதவிகளை வழங்குவதற்கான அணுகல் மறுக்கப்படுதல் அல்லது கட்டுப்படுத்தப்படுதல் ஆகியவையும் சமகால ஆயுத மோதல்களின் முக்கிய பண்புகளாக மாறியுள்ளன.

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் 1,010 இற்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. அலுவலகம், இது அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையினை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நிறுவனங்களுக்கிடையிலான நிரந்தரக் குழு (Inter-Agency Standing Committee) தற்போதைய காலகட்டத்தைத் "தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் யுகம்" என விவரித்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்வது என்பது வெறுமனே கடந்த காலத்திற்கான நீதி மட்டுமல்ல. எதிர்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் போர்களில் மனிதாபிமானப் பணியாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்கும், சர்வதேசச் சட்டங்களின் நம்பகத்தன்மையை மீள நிலைநாட்டுவதற்கும் இது மிகவும் அவசியமானது என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 21 மணி நேரம் முன்
அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியட்ட அறிவுறுத்தல்
அரசியல் முகாம்களாக பிளவுபட்டுள்ள தென்னிலங்கை அரசியல்! பிரபல தொழிலதிபர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri