தமிழர் பகுதியில் மாணவர்கள் குறித்து வெளியான செய்தி: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!
"பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் ” எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ளதாவது, முறைப்பாட்டிலக்கம் - HRC / JA / SuoMoto / 003 / 2023 (1996/21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை ) “பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்” எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
வடமாகாண போக்குவரத்துப் பிரிவு
குறித்த செய்திகளில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன் குளம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை A - 9 வீதியில் பயணிக்கும் பேருந்துகள் ஏற்றாது சென்றதால் மாணவர்கள் பரீட்சைக்குச் செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது.
என்றும் பரீட்சை நடைபெற்ற நாளான நேற்று முன்தினம் மாணவர்கள் தரிப்பிடத்தில் காத்திருந்தும் காலை 8.12 வரை மணிவரை எந்தப் பேருந்துகளும் மாணவர்களை ஏற்றவில்லை.
பின்னர் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், தரிப்பிடத்துக்கு விரைந்த பொலிஸார் அரச பேருந்து வருவதை அவதானித்து பேருந்தை மறித்த போது நடத்துநருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னரே மாணவர்களை ஏற்றிச் சென்றதுடன், மாணவர்களுக்குப் பருவகாலச் சிட்டை பெறுமாறு இ.போ.ச அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டதன் பிரகாரம் சிட்டை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் அதன் பின்னரே தம்மைப் பேருந்துகள் ஏற்றாமல் செல்வது அதிகரித்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் பலருக்குத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு, வீதியை மறித்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. நீதி மன்றுக்கும் கொண்டு செல்லப்பட்டு வடமாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அவதானம்
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் A - 9 வீதியை மூடிப் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகக் குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி, பத்திரிகையில் தெரிவித்த சம்பவம் மட்டுமன்றி ஏனைய போக்குவரத்துப் பாதையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறித்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களின் சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றினை உடன் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இவ்விடயமானது. 1996ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 (C) இன் பிரகாரம்
தேவைப்படுத்தப்படுகின்றது என்றுள்ளது.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
