இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி

Human Rights Commission Of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan political crisis C. V. Vigneswaran
By Rakesh Mar 04, 2023 09:40 AM GMT
Report

வடக்கு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கவில்லை, சர்வதேச விசாரணையையே கோரினார்கள் என தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் உள்ளகப் பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையிட்டதன் ஊடாக அவர்கள் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் நடத்திய கூட்டங்களில் அவ்வாறு எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி | Tamil Parties Stand Against Human Rights Report

உள்ளகப்பொறிமுறைக்கு இணக்கம்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் சர்வதேச பொறிமுறையொன்றை ஆதரிக்கும் தரப்பினர் அரசின் எத்தகைய கட்டுப்பாடுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடன் செயற்திறன்மிக்க நேர்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி நிறுவப்படக் கூடிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ற உள்ளகப்பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று வடக்குப் பயணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிவஞானம் சிறீதரன் 

ஆணைக்குழுவின் இந்த அறிக்கையிடல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூதுக்குழுவாகத்தான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் வடக்குக்கு வருகை தந்தார்கள்.

அவர்கள் இங்கு சிலரைச் சந்தித்தார்கள். அவர்களை மூளைச்சலவை செய்துள்ளார்கள்.

எமது மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் இலங்கையின் உள்ளக விசாரணைக்கு இணங்கமாட்டார்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி | Tamil Parties Stand Against Human Rights Report

இந்த ஆணைக்குழு பொய்யான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்துக்கு பச்சைப் பொய்யைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.

ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவரது கபடங்களைப் பற்றியும் தெரியும். அதிலொன்றுதான் இந்த ஆணைக்குழுவின் கபட அறிக்கையும்.

நாம் போர் முடிந்ததிலிருந்து உண்மை கண்டறியப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். அது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடனேயே செய்யப்படவேண்டும். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக தெரிவிக்கையில்,

உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்கின்றோம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சொன்னவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

வடக்கு தமிழ் மக்கள் என்று ஆணைக்குழு மொட்டையாகச் சொல்லியிருக்கின்றது. அவர்கள் தங்களுக்கு இவ்வாறு சொன்னவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாகச் சிலரை தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் இப்படியொரு கருத்தை முன்வைக்கமாட்டார்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி | Tamil Parties Stand Against Human Rights Report

அவர்கள் கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கூட சர்வதேச விசாரணையைக் கோரித்தான் கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

எனவே, இவ்வாறான உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டவர்களை ஆணைக்குழு வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லையெனில் இதனை வடக்கு மக்கள் சார்பான அறிக்கையாக ஒருபோதும் சொல்லக்கூடாது.

எம்மைப் பொறுத்தவரையில் குற்றமிழைத்தவர்களே விசாரணையைச் செய்யமுடியாது. அதனால்தான் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம்.

உள்ளகப் பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. சர்வதேசப் பொறிமுறை ஊடாகத்தான் நீதி கிடைக்கும்.

உள்ளகப் பொறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரைக் கூட கண்டுபிடிப்பதற்கான ஆணை இல்லை.

அதனைவிட அந்த அலுவலகத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கூட நிராகரித்துள்ளனர். இவ்வாறானதொரு இலட்சணத்தில் வடக்கு தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறையை கோருகின்றனர் என்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து நகைப்புக்கிடமானது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு சொல்வதன் ஊடாக உண்மையை மூடிமறைக்கின்றது. இவ்வாறு செய்வதன் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீதுதான் நம்பிக்கையீனம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி | Tamil Parties Stand Against Human Rights Report

சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில்,

எப்படியான உள்ளகப்பொறிமுறையும் நீதியைத் தராது. சர்வதேச பங்களிப்புடன் - பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறையையே நாம் வலியுறுத்தி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US