104 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் - உறவினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் இடமாற்றம்
மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புனரமைப்பு பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான பார்வையாளர்கள் காட்சி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று(01.08.2026) பிற்பகல் மஹர சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட அமைதியின்மையை சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri