ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்பின் அதிரடி தீர்மானம்
ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிபந்தனைக்கு உட்பட்டு தாக்குதல் ரத்து
அதில் மேலும், இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri