இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவில் அறிமுகம்

Vavuniya University of Jaffna Elephant
By Keethan Oct 07, 2023 11:43 AM GMT
Report

இலங்கையில் பல இடங்களில் 4500 கிலோமீற்றருக்கு மேல் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம், மக்கள் அதனை சரியாக பராமரிப்பதில்லை என வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சொத்து அரசாங்கம் செய்தது, ஆகவே அரசாங்கம் தான் பார்க்கவேண்டும் என நினைத்து சரியாக கவனிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்று (06.10.2023)  புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை சுற்றி அமைக்கப்பட்டடு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி


இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வனவிலங்கு சம்மந்தமான துறை

இலங்கையில் வனவிலங்கு சம்மந்தமான கலாநிதி பட்டப்படிப்பினை முடித்துக்கொண்ட கலாநிதி விஜயமோகன இலங்கையில் வனவிலங்கு சம்மந்தமான துறையில் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவில் அறிமுகம் | Human Elephant Conflict Is Increasing In Srilanka

இந்த யானை வேலி அமைப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  இலங்கையில் யானை மனித மோதல் என்பது பலகாலமாக இருக்கும் பாரிய பிரச்சினை அரசாங்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

யானை புத்தி கூர்மையான விலங்கு அமைக்கப்படும் வேலிகளை இலகுவாக உடைப்பதால் புதுவிதமான வேலியினை அமைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. வேலியின் அமைப்பினை மாற்றி அமைத்து செய்தால் யானை மனித மோதலை தவிர்கலாம் என்ற அமைப்பில் தொங்கு வேலி என்ற வடிவமைப்பினை 2016 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் எல் வடிவ தொங்கு வேலி வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

தொடரும் சீரற்ற காலநிலை: களத்தில் இராணுவம்

தொடரும் சீரற்ற காலநிலை: களத்தில் இராணுவம்

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தங்களுக்கும் இதனை அமைத்து தருமாறு கேட்டதற்கு இணங்க அமைத்து அங்கு சென்று கொடுத்தோன். இந்தியாவின் அசாம்,கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் 2000 ஆயிரம் கிலோமீற்றர் வரை தொங்கு வேலியினை அமைத்துள்ளார்கள்.

i வடிவ தொங்கு வேலி

இந்த தொங்கு வேலியில் மாற்றம் பெற்று i வடிவ தொங்கு வேலியினை நான் புதிதாக வடிவமைத்துள்ளோன். இது முதன் முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி யானைகளுக்கு மட்டுமான வேலி மற்றைய விலங்குகளுக்கான வேலி அல்ல. மக்களுக்கு அது தடுப்பாக அமையாது வளக்கமாக வனவிலங்கு இலாகாவினால் போடப்படும் குறுக்கு வேலி விலங்குகள் மக்கள் அனைவருக்கும் ஆனது.

இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவில் அறிமுகம் | Human Elephant Conflict Is Increasing In Srilanka

குறுக்கு வேலி அதிக செலவில் அமைக்கப்பட்டது. தொங்கு வேலி அப்படியல்ல செலவு குறைவு. யானை புத்தி கூர்மையுடையது இந்த வடிவமைப்பினையும் யானை உடைக்குமாக இருந்தால் இதற்கு அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் ஆராய்வோம்.

இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை பராமரிப்பதில்லை அரசாங்கத்தின் சொத்து அரசாங்கம் செய்தது.

வவுனியா பல்கலைக்கழகத்தில் யானை பாதுகாப்பு வேலி கண்டுபிடிப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தில் யானை பாதுகாப்பு வேலி கண்டுபிடிப்பு

ஆகவே அரசாங்கம்தான் பார்க்கவேண்டும் என நினைத்து சரியாக கவனிப்பதில்லை, இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது.  ஆனாலும் மனித யானை முரண்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

மக்களின் பங்களிப்பு ஒத்துளைப்பு இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. இந்த தொங்கு வேலி பராமரிப்பு மிகவும் குறைவு இதனை இந்த கிராம மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது தொடர்பில் எங்கள் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

மேலதிக செய்திகள்: பாலநாதன் சதீஸ்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US