வவுனியா பல்கலைக்கழகத்தில் யானை பாதுகாப்பு வேலி கண்டுபிடிப்பு
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு யானை வேலி கண்டுபிடிப்பானது பெயரை ஈட்டி தந்துள்ளதில் பெருமை கொள்வதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று (06.10.2023) புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானைவேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த யானை பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும்
விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட
யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை யானையில் இருந்து
பாதுகாப்பதற்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
யானை மனித முரண்பாடு
மேலும் அவர் தெரிவிக்கையில், யானை மனித முரண்பாடு என்பது இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளிலே இருக்கின்றது. யானையை கொல்லுவதென்பது இயற்கை சமநிலையை குழப்புகின்ற சூழல் உருவாகும்.
நீண்ட கால ஆய்வின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு தான் கலாநிதி விஜயமோகனின் கண்டுபிடிப்பு. இதனை நான் பாராட்டுகின்றேன். அவருடைய கண்டுபிடிப்பின் மூலம் பல்கலைக்கழகமும் சிறந்த பெயரை பெறுகின்றது. பல்கலைக்கழகம் என்ற ரீதியில் பெருமையடைகின்றோம்.
தொடர்ச்சியாக மனித யானை முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு உலக வங்கியின் நிதி உதவியில் வவுனியா பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டின் மூலம் இப்பிரதேசத்திற்கு இவ் வேலியானது கிடைத்திருக்கின்றது. சரியாக பராமரிப்பதன் மூலம் மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ தீங்கு விளைவிப்பதனை தவிர்ப்பதன் ஊடாக உலகத்தை சென்றடைவதற்கான வாய்ப்பாக இருக்கின்றது.
அதனூடாக எமது பல்கலைக்கழகம், இப் பிரதேசம், பிரதேச மக்கள், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை. யானை மனித முரண்பாடு என்பது தற்போதைய காலத்தில் கூடுதலாக காணப்படுகின்றது. மனிதர் யானைகளுடன் இணைந்து வாழ்வதனை இந்த கண்டுபிடிப்பானது கொடுக்கின்றது.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
மக்கள் அன்றாட வாழ்க்கை
அதன்மூலம் உயிரினங்களை பாதுகாத்து மக்களும் வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கும். இக் கண்டுபிடிப்பின் மூலம் பாரியளவு நன்மைகளை வழங்கும். அதாவது நிம்மதியாக நித்திரை கொள்வதற்கும், நிம்மதியாக கல்வி கற்பதற்கும் இவ்வாறான ஒரு சூழல் இலங்கையில் எல்லா இடத்திலும் பார்க்க முடியாது.
நகர்ப்புறங்களிலுள்ளவர்கள் அனைத்து விதமான வசதி வாய்ப்புகளுடனும் கல்வி கற்கிறார்கள். இந்த இடத்திற்கு வந்தால் மாணவர்கள் எவ்வாறு நிம்மதியாக கல்வி கற்பார்கள் என்பது அதிசயமாக இருந்தது.
மாணவர்கள் பயமில்லாமல் கல்வியை கற்பதற்கும், பிரதேச மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கும், அல்லது வாழ்வாதாரத்தை விவசாயத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இந்த வேலியானது பாரியளவு பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக யானை பிரச்சினை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக யானை தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது. மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சினையாக யானை பிரச்சினை காணப்படுகின்றது.
உலகத்தில் முதன் முறையாக செயற்படுத்தும் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிடைத்திருப்பது வரப்பிரசாதம் இதனை கண்டுபிடித்த கலாநிதி விஜயமோகனுக்கு வாழ்த்துக்கள். வவுனியா பல்கலைக்கழகம் பல நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பல விடையங்களை இருந்து எதிர்பாக்கின்றோம். பல்கலைக்கழகம் அறிவை மட்டும் கொடுப்பதல்ல பல திட்டங்களை செயற்படுத்துகின்ற வகையில் பல்கலைக்கழகம் அமையும் போது மக்களுக்கு சிறந்த பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலை அமைகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி தொடர்பான பல்கலைக்கழகம் உருவாவதற்கான வாய்ப்பு யாழ். பல்கலைகழகமா வவுனியா பல்கலைக்கழகமா என்ற பிரச்சினை இருந்தாலும் அது வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கினால் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
மனிதவலுக்கள் பணங்கள் செலவு செய்து இந்த யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது மக்கள்
இதனை சரியாக பாதுகாக்க வேண்டும் அதன் பொறுப்பினை மக்கள் எடுக்கவேண்டும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்: பாலநாதன் சதீஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
