வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தகவல்

இது தொடர்பில் இலங்கை மத்திய வெளியிட்டுள்ள தகவலில்,
மே மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
மே 2022 இல் இலங்கைக்கு 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தமாக வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தொழிலாளர்களால் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri