டொலரின் பெறுமதியில் அதிவேக வளர்ச்சி! மத்திய வங்கியின் அறிவிப்பு
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 350.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை 332.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 373.78 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 353.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 426.36 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 403.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
