ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கின்றேன் வாருங்கள்:எதிர்க்கட்சித் தலைவருக்கு கூறிய பிரதமர்
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்பிக்க தயாராக இருப்பதாகவும் அதற்காக தன்னை வந்து சந்திக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று நான் கற்பித்துள்ளேன். நான் இரண்டு மூன்று முறை ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளேன். இலங்கை தற்போது இருக்கும் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான எதிர்க்கட்சி.
கட்டாரில் இருந்து இயற்கை எரிவாயுவை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு பெட்ரோலை தேவை. கட்டாரில் பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியாது.
துபாய், குவைத், ஓமான் போன்ற ஏனைய நாடுகளிலேயே பெட்ரோலை கொள்வனவு செய்ய முடியும். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த போது அவரது பிரதிநிதியாக நானே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றேன்.
ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் ஜப்பானுக்கு சென்று 600 மில்லியன் டொலர்களை பெற்று வந்தேன்
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. நான் ஜப்பானுக்கு சென்றதும் ஜப்பான் 600 மில்லியன் டொலர்களை வழங்கியது. அன்றைய ஜப்பான் பிரதமர் வழங்கிய பணம் காரணமாக அன்று குவைத் போரின் போது இலங்கை தப்பியது.
அந்த காலத்தில் இருக்காதவர்களுக்கு இதனை நினைவுப்படுத்த வேண்டும். கழித்தல் 7 புள்ளியில் இருக்கும் பொருளாதாரத்தை எப்படி உடனடியாக ஆறு மாதத்தில் கூட்டல் புள்ளியாக மாற்ற முடியும் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் பதிலளிக்கவில்லை.
தற்போது 20 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல்,மோசடிகளை நிறுத்தினால், 2 பில்லியன் டொலர்கள் மீதமாகும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத இப்படியான எதிர்க்கட்சி குறித்து நான் வருத்தப்படுகிறேன்.
அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படி என்று நான் பழக்கினேன். இரண்டு, மூன்று முறை நான் அதிகாரத்தை கைப்பற்றினேன். இவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை.
மீண்டும் வாருங்கள், நான் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கற்பிக்கின்றேன். வெறுமனே கூச்சலிடுவதால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும்.
அதனை செய்ய முடியாது, இந்த இடத்தில் கூச்சலிடுவதால்,இவர்களில் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. உண்மையில் தற்போது இருப்பது இலங்கையில் மிகவும் பலவீனமான எதிர்க்கட்சி என்பதை கூறவிரும்புகிறேன்.
அதிகாரத்தை கைப்பற்ற முடியாது வெறுமனே கூச்சலிட்டு பயனில்லை. தட்டிகளை தூக்குவதால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அதிகாரத்தை என்பது கையில் எடுத்து பெற வேண்டியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் பிரதமருக்கு ஏற்கனவே பாடம் கற்பித்து விட்டோம்
இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
பிரதமருக்கு வரலாறு மறந்து போயுள்ளது. ரணசிங்க பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவை, 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தில் பெயரளவில் வைத்துக்கொண்டார்.
எனது தந்தையே பிரதமருக்கு கற்றுக்கொடுத்தார். பாடம் கற்றுக்கொள்ள தன்னிடம் வருமாறு பிரதமர் கூறுகிறார். நாங்கள் அவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பாடத்தை நன்றாக கற்றுக்கொடுத்துள்ளோம்.
தனியாக அவர் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து தனியாக அமர்ந்து இருக்கின்றார். தற்போது எங்களை கற்றுக்கொள்ள வருமாறு கூறுகிறார் எனக் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri
