பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் - நாடாளுமன்றத்தில் ரணில் அறிவிப்பு(Live)
தனது பதவியை இராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பிரதமர் பதவியை வழங்குகள் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு முடியுமென்றால் அந்த திட்டத்தை வரவேற்கின்றோம்.
பதவி விலகத் தயார்
அநுர குமார திஸாநாயக்கவின் திட்டம் வெற்றியளிக்கும் என்றால் உடனடியாக பதவியை விலக தயாராக உள்ளேன்.
பாரிய வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை 6 மாதங்களுக்கு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அநுர குமாரவிடம் திட்டமிருந்தால் அதற்கு ஒரு நோபல் பரிசு வழங்க முடியும்.
எனவே அந்த திட்டத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதியிடம் முன்வைக்க விருப்பமில்லை என்றால் நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அநுரவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
எனவே எங்களை விடவும் சிறந்த வேலைத்திட்டம் உள்ள ஒருவரிடம் நாட்டை வழங்குவதற்கு நான் எதிர்ப்பு வெளியிட மாட்டேன். நான் பொய்யான தகவலை கூற மாட்டேன். அநுர குமாரவினால் 6 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்றால் எனது பதவியை விட்டுக்கொடுத்து இராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளா்.
பிரதமர் பதவி விலகுவதாக கூறியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோ ஹோம் கோட்டா என கூச்சிலிட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
முக்கிய முடிவை அறிவிக்கும் ரணில்! நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டாபய மற்றும் மகிந்த (Live)
சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல்(Live)