முக்கிய முடிவை அறிவிக்கும் ரணில்! நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டாபய மற்றும் மகிந்த (Live)
ரணிலின் விசேட உரை
நாடாளுமன்றில் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதி
இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருகை தந்துள்ளதுடன், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிரதமர் ரணில் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம்.
ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல, வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளோம். பல்வேறு கட்டங்களின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
தற்போது எமது நாடு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கே அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதியை வலுவடையச் செய்யும் நோக்கில் பணம் அச்சிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.