தமிழகத்தில் பிரபலமான ஒருவருக்கு சூட்டப்படவிருந்த பெயர் ஐயாதுரை! யார் அந்த பிரபலம்?
தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் வைக்கப்படவிருந்த பெயர் என்ன என்பது தொடர்பில், அவரே தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றபோது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கம்யூனிச கொள்கை மீது தமது தந்தையான மு.க கருணாநிதிக்கு அசையாத நம்பிக்கை இருந்தமையால், ஸ்டாலின் என்ற பெயரை சூட்டினார்.
முன்னதாக தமக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாகவே இருந்தது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று தமது தந்தையான கருணாநிதி கருதியிருந்தார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் தலைவர் -'ஜோசப் ஸ்டாலின்' Joseph Vissarionovich Stalin இறந்த நிலையில் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அப்போது ஒரு துண்டு சீட்டு கலைஞர் அவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
அதில், உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி எழுதப்பட்டிருந்தது.
அங்கேயே “எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்“ என்று கலைஞர் தெரிவித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.




நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam