முல்லைத்தீவில் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்
முல்லைத்தீவு(Mullaitivu)-முறிப்பு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று நேற்றையதினம்(15) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவரின் வீடே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு தீ வைப்பு
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்(14) தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் மோகன் கோகுலன் எனும் குடும்பஸ்தரே படுகாயமடைந்த மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்தே நேற்றையதினம் உயிரிழந்தவரின் எதிராளிகளில் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |