பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட்ட நபர்கள்
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகரின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் இன்று மதியம் புகுந்த நபர்கள் வீட்டில் இருந்த இரண்டு அலைபேசிகள், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரி 56 துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்

வெலிபென்ன, பொந்துப்பிட்டி குருந்த வீதியில் உள்ள பொறுப்பதிகாரியின் வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் வீட்டுக்கு நுழையும் போது, பொலிஸ் பரிசோதகர் வீட்டில் இருக்கவில்லை.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி அவரது மனைவி காயமடைந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் கூறியுள்ளனர். வீட்டுக்குள் புகுந்த நபர்கள் ரி.56 ரக துப்பாக்கியை கொண்டு வந்ததாகவும் தங்கச்சங்கிலி,மோதிரம் ஆகியவற்றை கொள்ளையிட்டு, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சீ.சீ.டி.வி கெமராக்களை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

களுத்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ச தலைமையில் வெலிபென்ன பொலிஸார், சில பிரதேசங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராக்களை பயன்படுத்தி, சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan