மகிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரின் ஒரு பகுதி கட்டிடம் இடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னைய தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் அஹுங்கல்லை கடற்கரையல் நிர்மாணித்திருந்த அனுமதியற்ற கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல கடற்கரையில் உள்ள பல அனுமதியற்ற கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு அண்மையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கோவிட் தொற்று காரணமாக
அதன் பிரகாரம் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் அஹுங்கல்ல கடற்கரையில் உள்ள பல அனுமதியற்ற கட்டுமானங்களை இடித்துள்ளது.

இவ்வாறு அகற்றப்பட்ட கட்டுமானங்களில், காலஞ்சென்ற எலியந்த வைட்டுக்குச் சொந்தமானது என்று கூறப்படும், கடற்கரைக்கு அருகிலுள்ள 'வைட் வில்லா' சுற்றுலா விடுதியின் ஒரு பகுதியும் அடங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவரான எலியந்த வைட் என்பவர், கடந்த கோவிட் காலத்தில் கோவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தான் பிரத்தியேக மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
எனினும் சிறிது காலத்திற்குள்ளாக அவரே கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.