பிரபல பெண் அரசியல்வாதியின் மகன் மரணம்
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயருமான ரோசி சேனாநாயக்கவின் மகன் கனிஷ்க சேனாநாயக்க 41 வயதான காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது சமூக வலைதளப் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்கள் பார்வையை விட்டுச் சென்றாலும், எங்களின் இதயங்களை விட்டு எப்போதுமே நீங்க மாட்டீர்கள். அமைதியாக ஓய்வெடுங்கள் சகோதரனே” என ஹரின் பெர்னாண்டோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கனிஷ்க சேனாநாயக்க கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

சிறு வயது முதலே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அரசியல் தவிர, பெருந்தோட்ட மற்றும் நிறுவனத் துறைகளிலும் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்திருந்தார். பல நிறுவனங்களின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
ரோசி சேனாநாயக்க மற்றும் காலஞ்சென்ற அதுல சேனாநாயக்க தம்பதியரின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்கவின் திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது