போர் நிறுத்தம் என்றால் மாத்திரமே விடுவிப்பு சாத்தியம்! அமெரிக்கவுக்கு ஹமாஸ் நெருக்கடி
முதற்கட்ட போர் நிறத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அமெரிக்க பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படுவதற்கும், அமெரிக்க பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் தமது கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவேண்டும் என ஹமாஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம்
"போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தைகள் விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.
மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காசா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும்.
பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர்
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர், இது ஹமாஸின் சூழ்ச்சி மற்றும் உளவியல் போர் என குற்றம் சாட்டியிருந்தார்.
நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பதற்கான திட்டத்தை முன்வைப்பதாக அமெரிக்கா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் முற்றிலும் நடைமுறைக்கு மாறான கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் முன்வைப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |