அரச வங்கி ATM பணக்கொள்ளை! பின்னணியில் கோடீஸ்வர தொழிலதிபர்கள் - அம்பலமான பெரும் மோசடி
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம் அடங்கிய பணப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை (03) திகதி பிற்பகல் நபரொருவரால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கோடீஸ்வர தொழிலதிபர்கள் மீதும் விசாரணை
சம்பவம் தொடர்பாக, வங்கியின் உதவி மேலாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வங்கியின் உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட வங்கி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருட்டு நடந்த விதத்தை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் காணாமல்போயுள்ளமை தொடர்பாக இரண்டு கோடீஸ்வர தொழிலதிபர்கள் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பாணதுறை பிரதேச குற்றப் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளர், இதற்கு முன்னர் நல்லலுருவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களிடமிருந்தும், ஹொரணைபகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடமிருந்தும் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் இந்த இரண்டு தொழிலதிபர்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
பெரும் கடனை மறைக்க மோசடி
சந்தேகநபர் தனக்கு ஏற்பட்ட பெரும் கடனை மறைப்பதற்காக இந்த மோசடியைச் செய்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வங்கியின் பணம் கொள்ளையிடப்பட்டதாக அவர் அளித்த முறைப்பாடு பொய்யானதா என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உதவி வங்கி மேலாளர், பல்வேறு பெண்களிடமிருந்து வட்டிக்கு வாங்கிய பணத்திற்கான வட்டியைச் செலுத்துவதற்காக வங்கியில் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், அவர் இவ்வாறு வாங்கிய பணத்தை சுரங்கத்தொழில் போன்ற பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர் சம்பந்தப்பட்ட அரச வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை வைப்பு செய்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் குறிப்பிட்ட தொகையை விடக் குறைவான பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் டெபொசிட் செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தை நீண்ட காலமாக இரகசியமாக தன்வசம் வைத்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நேரடி மோசடி
வங்கி நீண்ட காலமாக நேரடி நிதித் தணிக்கை நடத்தாததால், இந்த மோசடி கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட உதவி மேலாளர் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் கடன் கொடுத்துள்ளார்.

மேலும், தனக்கு நெருங்கிய உறவுள்ள மாடல்கள் உட்பட பல இளம் பெண்களுக்காக அவர் பெரும் தொகையைச் செலவழித்ததும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் படி, இந்த அரச வங்கியில் வெளியாட்கள் பணக்கொள்ளையில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லையென கூறப்படுகின்றுது.
சந்தேகத்திற்குரிய உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியில் ஒரு திட்டமிட்ட பொய் இது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri