இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கியுள்ள இலட்சக்கணக்கானோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப்பதிவு இலக்கத்தகடுகள் (Number plates) அச்சிடும் பணி, இன்று (8) முதல் மீண்டும் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்கத்தகடுகள்அச்சிடும் பணி, இன்று காலை 10.00 மணிக்கு வெரஹேரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
ஒப்பந்தப்புள்ளியில் ஏற்பட்ட சிக்கல்
மோட்டார் வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தப்புள்ளியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, 2025 மே 16 அன்று பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மார்ச் 10 அன்று ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன.
மோட்டார் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அச்சிட்டு வழங்கப்பட வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கையில் 400,000-க்கும் மேற்பட்ட வாகனப்பதிவு தகடுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அச்சிடப்பட உள்ள பதிவு எண்கள்
இந்த வாகனப்பதிவு எண், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வாகனங்கள், கார்கள், வான்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களை உள்ளடக்கியுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவு எண்கள் மட்டுமே கிட்டத்தட்ட 200,000 அச்சிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam