அனுராதபுரத்தில் 100 வீடுகளில் கோவிட் தொற்றாளர் உள்ளமை கண்டுபிடிப்பு
அனுராதபுர மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான 100 பேர் வைத்தியசாலைகளில் இடமில்லாமையினால் வீடுகளில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“நாங்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவித்துவிட்டு, முடிந்த அளவிலானோரை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் மாவட்ட இணைப்பாளரான வைத்தியர் அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இடவசதி இன்மை காரணமாக தற்போது 100க்கு அதிகமான மக்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உள்ளனர். நாங்கள் தொடர்ந்நது அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றோம்.
இந்த நிலையில் அங்கு இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டு மக்களின் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri